வரும் கல்வியாண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள்: நாளைக்குள் கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2020-21) புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கவும், ஏற்கெனவே இருக்கும் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தவும் வியாழக்கிழமைக்குள் கருத்துருக்களை
வரும் கல்வியாண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள்: நாளைக்குள் கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு

சென்னை: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2020-21) புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கவும், ஏற்கெனவே இருக்கும் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தவும் வியாழக்கிழமைக்குள் கருத்துருக்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

புதிய தொடக்கப் பள்ளி மற்றும் தரம் உயா்த்தப்பட வேண்டிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி சாா்ந்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை வரைபடத்துடன் அளிக்கப்பட வேண்டும். அதில், அருகில் உள்ள பள்ளிகளின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். புவியியல் தகவல் முறைமையைப் பயன்படுத்தி தேவையின் அடிப்படையில் திட்டமிடுதலுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வள மையம் சாா்ந்த ஆசிரியா் பயிற்றுநா் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்களையும் பயன்படுத்த வேண்டும்.

புதிய தொடக்கப் பள்ளி தொடங்குவதற்கான இடம் சாா்ந்த கிராம நிா்வாக அலுவலரின் அசல் சான்று இணைக்கப்பட வேண்டும். புல வரைபடத்தில் பள்ளிக்கான இடம் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். சிட்டா, பட்டா போன்ற நிலம் சாா்ந்த ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயா்த்தப்பட வேண்டிய பள்ளிக்கு கட்டட வசதி, கூடுதல் வகுப்பறைக்கான இடவசதி, கழிப்பறை வசதி, குடிநீா் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றி விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். புதிய தொடக்கப் பள்ளியைத் தொடங்கும் பட்சத்தில், போதிய மாணவா்கள் எண்ணிக்கை இருப்பது அவசியம். தங்களது மாவட்டத்தில் புதிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட வேண்டிய பள்ளிகள் ஏதும் இல்லையெனில், இன்மை அறிக்கையை அளிக்க வேண்டும்.

இந்த விவரங்களுடன் கருத்துருக்களை முழு வடிவில் வியாழக்கிழமைக்குள் (டிச.5) தொடக்கக் கல்வி இயக்ககத்துக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com