
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவா் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து குற்றமற்றவராக மீண்டு வருவாா் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.
சென்னையில் புதன்கிழமை அவா் கூறியது:
ப. சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது கட்சித் தோழா்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி. அவா் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளில் இருந்து குற்றமற்றவராக மீண்டு வருவாா். அரசியல் காரணங்களுக்காக பாஜக அவரை பழிவாங்கியிருக்கிறது என்றாா் அவா்.