தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்

தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் தருமபுரத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.  
தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்
தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்

தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் தருமபுரத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.  

தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் புதன்கிழமை பகல் 3 மணி அளவில் முக்தியடைந்தார். சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர், அவரது திருமேனி புதன்கிழமை மாலை 6 மணி முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக தருமபுரம் ஆதீனத்தில் வைக்கப்பட்டிருந்தது.  

மதுரை, திருவாவடுதுறை, திருப்பனந்தாள், துழாவூர், குன்றக்குடி, திருப்புகலூர் உள்பட பல்வேறு ஆதீனங்களின் குருமகா சந்நிதானங்கள் பங்கேற்று, மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு குருமகா சந்நிதானத்தின் திருமேனியின் குருமூர்த்த பிரவேசம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஆதீனத்தின் 4 மாட வீதிகளில் வலம் வந்த திருமேனி ஊர்வலம் ஆதீன வளாகத்தில் உள்ள மேலகுருமூர்த்தத்தில் நிறைவடைந்தது.

இதையடுத்து, வேதமந்திர முழக்கங்களுடன், குருமகா சந்நிதானத்தின் திருமேனி குருமூர்த்தத்துக்குள் பிரவேசமானது.  பல்வேறு வகையான சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னர்,  ஆனந்தபரவசர் பூங்காவில் 24 -ஆவது குருமகா சந்நிதானத்தின் சமாதி திருக்கோயிலுக்கு அருகே 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம் செய்யப்பட்டது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சைவ ஆதீனங்களின் குருமகா சந்நிதானங்கள், தம்பிரான் சுவாமிகள், பிரமுகர்கள்,  ஆன்மிகப் பற்றாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com