நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதேதான் தண்டனை!

நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைப் போன்ற தண்டனைகளே வழங்குவோம் என்று தெலங்கானா என்கவுன்டருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதேதான் தண்டனை!

சென்னை: நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைப் போன்ற தண்டனைகளே வழங்குவோம் என்று தெலங்கானா என்கவுன்டருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

நிலவுக்கு பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவரிடம் தெலங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற நான்கு குற்றவாளிகளை காவல்துறை என்கவுண்டர் செய்தது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

அதனை நான் வரவேற்கிறேன். மரணம் என்பது எந்த ஒரு குற்றத்திற்கும் தண்டனையாக இருக்ககூடாது என்று போராடும் பிள்ளைகள் நாங்கள். இருப்பினும் பெண்களை ஒரு போகப் பொருளாக, போதைப் பொருளாக , நுகர் பொருளாக கருதி  வன்புணர்வு செய்யும் அந்த செயலுக்கு மரணத்தை தவிர வேறு தண்டணை இருக்க முடியாது. பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 90 நாட்களில் குண்டாசை ரத்து செய்து வெளியே விடுவது என்பது வரலாற்று பெரும்பிழை.  குழந்தைகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கும் இதுபோன்ற தண்டணைகள் தரப்பட்டால்தான் அப்படிப்பட்ட குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு அச்சம் பிறக்கும். அதனால் இதை நாங்கள் வரவேற்கிறோம். நாளை நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதைப் போன்ற தண்டனைகளே வழங்குவோம். 

இவ்வாறு அவர் பதிலளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com