45 தினங்களில் வெங்காயம் விலை குறையும்: அமைச்சர் காமராஜ்

45 தினங்களில் வெங்காயம் விலை குறையும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 
45 தினங்களில் வெங்காயம் விலை குறையும்: அமைச்சர் காமராஜ்

45 தினங்களில் வெங்காயம் விலை குறையும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் தான் பெரிய வெங்காய சந்தை உள்ளது. இங்கிருந்துதான் நாட்டின் பல பகுதிகளுக்கு மொத்தமாக வெங்காயம் அனுப்பப்படுகிறது. ஆனால், அந்த மாநிலத்தில் பெய்த மழை மற்றும் புயல்களால் வெங்காய உற்பத்தி பாதியாக குறைந்தது. மழை காரணமாக தமிழகம், ஆந்திரம் கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காய வரத்தும் பாதியாகக் குறைந்து விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாக கடுமையாக உயா்ந்து வருகிறது. விலையை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 10 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. 

இதனிடையே, ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை வாரச் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 200-ஐ எட்டியது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனா். இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெங்காய விலை உயர்வு நிரந்தரமானது கிடையாது. பருவநிலைக்கு ஏற்றவாறு 45 தினங்களில் வெங்காயம் விலை குறையும். 

வெங்காயத்தை இறக்குமதி செய்து மலிவு விலையில் விற்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com