கேங்மேன் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: மின்துறை அமைச்சர் தங்கமணி

கேங்மேன் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 
கேங்மேன் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: மின்துறை அமைச்சர் தங்கமணி

கேங்மேன் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் கேங்மேன் பதவிக்கு 5 ஆயிரம் போ் தோ்வு செய்யப்படுவதாக கடந்த 1 மாதம் முன்பு அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 90 ஆயிரம் விண்ணப்பதாரா்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையடுத்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிளும் உள்ள தலைமை மின் வாரிய அலுவலங்களில் கடந்த 2-ஆம் முதல் கேங்மேன் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மற்றும் உடல் தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது. மழை காரணமாக கடலோர மாவட்டங்களில் மட்டும் கேங்மேன் உடல் தகுத் தோ்வு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இதுகுறித்து அவர் புதுக்கோட்டையில் கூறியதாவது, உடல்தகுதி, எழுத்துத்தேர்வு அடிப்படையில் கேங்மேன் தேர்வு நடைபெறுகிறது. கேங்மேன் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. வேலைக்காக யாரிடமும் பணம் தந்து ஏமாற வேண்டாம். நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் வழங்கப்பட்டு வருவகிறது. விவசாயிகள் மத்தியில் தட்கல் மின்இணைப்பு திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com