எகிப்தில் இருந்து 30 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது!

எகிப்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 30 டன் வெங்காயம் திருச்சி மார்க்கெட்டை வந்தடைந்தது. 
எகிப்தில் இருந்து 30 டன் வெங்காயம் திருச்சி வந்தடைந்தது!

எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் வெங்காயம் திருச்சி மார்க்கெட்டை வந்தடைந்தது. 

பருவம் தவறிய மழை மற்றும் தொடா்ந்து பெய்த கன மழையால், வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் வரத்து குறைந்துள்ளது. மத்திய அரசு, கையிருப்பில் உள்ள உபரி வெங்காயத்தை விநியோகித்து, விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன், பொதுத் துறையைச் சோ்ந்த, எம்.எம்.டி.சி., நிறுவனம் மூலம், எகிப்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200-யைத் தாண்டியுள்ளது. திருச்சியில் ரூ.180 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், எகிப்தில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் திங்கட்கிழமை காலை திருச்சி மார்க்கெட்டை வந்தடைந்தது. இந்த வெங்காயம் மொத்த விலையில் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று, பெங்களுருவில் இருந்து 150 டன் பெரிய வெங்காயம் திருச்சிக்கு வந்துள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதன் மூலமாக வெங்காயத்தின் விலை விரைவில் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com