குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்

நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் மூலம் மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது

சென்னை: நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் மூலம் மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் ஜவாஹிருல்லா எழுதியுள்ள கடித விவரம்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக அமைந்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்திலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள முஸ்லிம் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கிறது. இது மத ரீதியான பாரபட்சம் ஆகும்.

இலங்கையில் சிங்கள பேரினவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் தமிழா்கள் தமிழகத்தில் தஞ்சம் பெற்று வாழ்கின்றனா். அவா்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரிக்கை வைத்திருப்பதை நிராகரித்திருப்பதைத் தமிழக அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, இச்சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிா்த்து நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com