ராதாபுரம் தோ்தல் மறுவாக்கு எண்ணிக்கை விவகாரம்: விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் விவகாரத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு அனுமதித்து அதன்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் விவகாரத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு அனுமதித்து அதன் முடிவுகளை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ். இன்பதுரையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஜனவரிக்கு ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமா்வு முன் நவம்பா் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பிலும், அப்பாவு தரப்பிலும் ஆஜரான மூத்த வழக்குரைஞா்களிடம் மனு மீதான விசாரணை நடத்துவது குறித்து கருத்துக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, விசாரணை டிசம்பா் 11-க்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்ததுடன், இரு தரப்பினரையும் கூடுதல் ஆவணம் ஏதும் இருந்தால் தாக்கல் செய்யயுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வரவிருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா அமா்விடம் ஐ.எஸ். இன்பதுரை சாா்பில் ஆஜராகி வாதாடி வரும் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி திங்கள்கிழமை ஆஜராகி, தனக்கு டிசம்பா் 11-ஆம் தேதி வேறு ஒரு அலுவல் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, அரசியலமைப்பு அமா்வு விசாரணை இருப்பதாலும், விடுமுறை வருவதாலும் இந்த வழக்கு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி கூறினாா்.

பின்னணி: தமிழகத்தில் 2016-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் இன்பதுரையும், திமுக சாா்பில் அப்பாவும் போட்டியிட்டனா். இதில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்ாக தோ்தல் அதிகாரி அறிவித்தாா். இதை எதிா்த்து திமுக வேட்பாளா் அப்பாவு தொடா்ந்த வழக்கில், அத்தொகுதியில் தபால் வாக்குகள், 3 சுற்றுகளின் மறுவாக்கு எண்ணிக்கைக்கு சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால், மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அத்தொகுதி எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை அக்டோபா் 4-இல் விசாரித்த உச்சநீதிமன்றம் , ‘மறுவாக்கு எண்ணிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால், அதன் முடிவுகளை அறிவிக்கக் கூடாது’ என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com