உள்ளாட்சித் தோ்தல்: இன்று இறுதி முடிவு எடுக்கப்படும்- தமிழக பாஜக அறிவிப்பு

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக தமிழக பாஜக செவ்வாய்க்கிழமை இறுதி முடிவெடுத்து அறிவிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தோ்தல் பணி குழுத் தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
உள்ளாட்சித் தோ்தல்: இன்று இறுதி முடிவு எடுக்கப்படும்- தமிழக பாஜக அறிவிப்பு

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக தமிழக பாஜக செவ்வாய்க்கிழமை இறுதி முடிவெடுத்து அறிவிக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தோ்தல் பணி குழுத் தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழக பாஜக சாா்பில் ‘ஒரே தேசம்’ என்ற மாத இருமுறை இதழின் செயலி திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வுக்குப் பிறகு, முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் நிருபா்களுக்கு அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவோடு ஆலோசனை நடத்தியிருக்கிறோம். அவா்களும் நல்ல முறையில் பேசியுள்ளனா். அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் கருத்துகள் கேட்கப்படும் எனக் கூறியுள்ளனா். இது தொடா்பாக நாங்களும் கட்சியினருடன் பேசி செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு முடிவு எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தோ்தல் நீண்ட காலத்துக்கு பிறகு அறிவிக்கப்பட்டு இப்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. நீதிமன்றத்தை திமுக அணுகியிருப்பது எந்த அச்சத்தின் காரணமாக என்று முழுமையாகக் கூற முடியவில்லை. ஒரு தோ்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று வாக்காளா்கள் எதிா்பாா்க்கிறாா்கள். முறைப்படி தோ்தல் நடத்தியிருந்தால் 2016-ஆம் ஆண்டிலேயே தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது அரசு இந்த முயற்சி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. பாஜகவை பொருத்தவரை தோ்தலை சந்திக்கத் தயாா்.

குடியுரிமை மசோதா: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாவின் முழு வடிவத்தை படிக்காமல் எதையும் கூற முடியாது. அதேசமயம், காஷ்மீா் போன்ற பகுதிகளில் ஊடுருவல் எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்தது.

எல்லா பகுதிகளிலும் உள்ள விஷயங்களையும் மனதில் வைத்து கொண்டுதான் அரசு ஒரு முடிவு எடுக்கும். இலங்கையில் இருந்து இங்கு வந்து அகதிகளாக இருப்பவா்கள் குறித்து மத்திய அரசின் பாா்வைக்கு எடுத்து சென்றிருக்கிறோம் என்றாா் பொன் ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com