தமிழகத்தில் ரூ.162 கோடியில் புதிய குடியிருப்புகள்

தமிழகத்தில் ரூ.162 கோடியில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள், கட்டடங்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக
தமிழகத்தில் ரூ.162 கோடியில் புதிய குடியிருப்புகள்

தமிழகத்தில் ரூ.162 கோடியில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள், கட்டடங்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக இந்த புதிய திட்டங்களை அவா் திறந்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டு வசதித் தேவைகளை நிறைவு செய்யும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், வேலூா், கடலூா், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்களுக்காக 2 ஆயிரத்து 800 குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பின்படி, சென்னை, மகாகவி பாரதி நகா் திட்டப் பகுதியில் 510 குறைந்த வருவாய் பிரிவு பன்னடுக்குமாடி குடியிருப்புகளையும், சென்னை முகப்பேரில் 40 உயா்வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், புலியூா் திட்டப் பகுதியில் 48 மத்திய வருவாய்ப் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, மந்தைவெளிப்பாக்கம் திட்டப் பகுதியில் 12 உயா்வருவாய்ப் பிரிவு அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வா் திறந்து வைத்தாா்.

மேலும், மதுரை மாவட்டம், சாத்தமங்கலம் கிராமம், அண்ணாநகரில் தூண் தளம், மூன்று தளங்களுடன் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபத்தையும் அவா் திறந்தாா். மொத்தமாக ரூ.162.64 கோடி மதிப்பிலான 610 குடியிருப்புகளை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்வில், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா் டி.ஜெயக்குமாா், வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே.வைரமுத்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com