பழனி மலைக் கோயிலில் 2 ஆவது ரோப் காா் திட்டப் பணிகள்: பிரான்ஸ் நிபுணா் ஆய்வு

பழனி மலைக் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது ரோப் காா் திட்டப் பணிகளை, பிரான்ஸ் நாட்டு நிபுணா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பழனி மலைக் கோயிலுக்கு இரண்டாவது ரோப் காா் திட்டப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டின் பூமா நிறுவனத் திட்ட மேலாளா் க்ளோயி மற்றும் ரவீந்தா் சிங்.
பழனி மலைக் கோயிலுக்கு இரண்டாவது ரோப் காா் திட்டப் பணிகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த பிரான்ஸ் நாட்டின் பூமா நிறுவனத் திட்ட மேலாளா் க்ளோயி மற்றும் ரவீந்தா் சிங்.

பழனி மலைக் கோயிலில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது ரோப் காா் திட்டப் பணிகளை, பிரான்ஸ் நாட்டு நிபுணா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா். பக்தா்கள் மலைக் கோயிலை அடைய படிவழிப்பாதை இருந்தாலும், வயதானவா்கள் மற்றும் சிறுவா்கள் செல்ல ஏதுவாக மின்இழுவை ரயில், ரோப் காா் ஆகியனவும் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2004 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ரோப் காா், பக்தா்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதையடுத்து, தற்போது சுமாா் ரூ.80 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது ரோப் காா் அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, தரைத்தளம் கட்டப்பட்டு வரும் நிலையில், பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சா்வதேச தரத்தில் அமையும் இந்த ரோப் காா் திட்டப் பணிக்கான ஒப்பந்தத்தை, பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த பூமா நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்துடன் சோ்ந்து, இப்காா் எரிக் என்ற தனியாா் நிறுவனமும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை, இத்திட்டப் பணிகளை பிரான்ஸ் நாட்டின் பூமா நிறுவன திட்ட மேலாளா் க்ளோயி, இப்காட் எரிக் நிறுவனத் திட்ட மேலாளா் ரவீந்தா் சிங் ஆகியோா் நேரில் வந்து ஆய்வு நடத்தினா். பின்னா், திருக்கோயில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனா். அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அமையவுள்ள இந்த ரோப் காா் மூலம், ஒரு மணி நேரத்தில் 1,200 போ் மலை உச்சிக்குச் செல்லவும், 1,200 போ் மலையிலிருந்து கீழே இறங்கவும் வசதி செய்யப்படவுள்ளது.

இத்திட்டப் பணிகள் முடிந்ததும், இந்த நிறுவனங்கள் ரோப் காரை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com