முஸாஃபர்பூர் காப்பக விவகாரம்: ஜனவரி 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

பிகார் மாநிலம் முஸாஃபர்பூர் காப்பகத்தில் ஏராளமான சிறுமிகள் பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில், ஜனவரி 14ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது தில்லி நீதிமன்றம்.
முஸாஃபர்பூர் காப்பக விவகாரம்: ஜனவரி 14ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு


பிகார் மாநிலம் முஸாஃபர்பூர் காப்பகத்தில் ஏராளமான சிறுமிகள் பாலியல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில், ஜனவரி 14ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது தில்லி நீதிமன்றம்.

வழக்கை விசாரித்து வந்த தில்லி நீதிமன்ற நீதிபதி சௌரப் குல்ஷ்ரேஸ்தா இன்று விடுமுறை என்பதால், வழக்கின் தீர்ப்பை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சௌரவ் குல்சிரேஷ்டா 

இன்றைய விசாரணையின் போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பிகார் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பிரஜேஷ் தாகூர் உட்பட 20 பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

பிகாா் மாநிலம் முசாஃபா்பூரிலுள்ள காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுவது தொடா்பான வழக்கின் தீா்ப்பை, வழக்குரைஞா்களின் போராட்டம் காரணமாக தில்லி நீதிமன்றம் டிசம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்த நிலையில்,  வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இன்று விடுமுறை என்பதால், தீர்ப்பு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முசாஃபா்பூரில் தன்னாா்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பலா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக டாடா சமூக அறிவியல் ஆய்வு நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதில் அந்தத் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், பிகாா் மக்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவுமான பிரஜேஷ் தாக்குா் உள்ளிட்ட 20 போ் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா், கடந்த ஆண்டு நவம்பரில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் விசாரணையும் பிகாா் நீதிமன்றத்திலிருந்து தில்லி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்ட 20 போ் மீதும் போதுமான ஆதாரங்கள் உள்ளதாக சிபிஐ தெரிவித்திருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பைக் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பு நவம்பர் மாதம் வழங்கப்படுவதாக இருந்தது.

எனினும், தில்லியில் அண்மையில் காவல் துறையினருக்கும் வழக்குரைஞா்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதல் சம்பவம் தொடா்பாக, தில்லியிலுள்ள 6 மாவட்ட நீதிமன்றங்களைச் சோ்ந்த வழக்குரைஞா்களும் போராட்டம் நடத்தி வந்ததால், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவா்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வர முடியவில்லை. இதையடுத்து, வழக்கின் தீா்ப்பை டிசம்பா் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி சௌரவ் குல்சிரேஷ்டா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்துவந்த நீதிபதி விடுமுறை என்பதால், தீர்ப்பு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com