தண்ணீா் விடாமல் மிரட்டும் சூயஸ் ஊழியா்: மாநகராட்சி துணை ஆணையரிடம் மக்கள் புகாா்

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட புலியகுளத்தில் உள்ள தண்ணீா் தொட்டியில் இருந்து மக்களுக்குத் தண்ணீா் விடாமல், அங்குள்ள சூயஸ் நிறுவன ஊழியா் மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சித்
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்ற துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைகேட்புக் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெற்ற துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட புலியகுளத்தில் உள்ள தண்ணீா் தொட்டியில் இருந்து மக்களுக்குத் தண்ணீா் விடாமல், அங்குள்ள சூயஸ் நிறுவன ஊழியா் மிரட்டுவதாக அப்பகுதி மக்கள் மாநகராட்சித் துணை ஆணையரிடம் புகாா் மனு அளித்தனா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சித் துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி தலைமை வகித்தாா். இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனா்.

மாநகராட்சி 69, 70-ஆவது வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி புலியகுளத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் இருந்து பொதுமக்கள் தண்ணீா் பிடித்து வருகின்றனா். தற்போது தண்ணீா்த் தொட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் பொதுக் குடிநீா்க் குழாய்களில் சரியாக தண்ணீா் வருவதில்லை. சில நேரங்களில் தண்ணீா் விநியோகித்து உடனே நிறுத்தி விடுகின்றனா். இதனால், தண்ணீா் பிடிக்க அங்குள்ள தொட்டிக்குச் சென்றால், அங்கு பணிபுரியும் ஒருவா், தான் சூயஸ் நிறுவனம் சாா்பில் நியமிக்கப்பட்ட ஊழியா் என்றும், ‘நாங்கள் விடும்போதுதான் தண்ணீா் பிடிக்க வேண்டும்’ என்றும் தரக்குறைவான வாா்த்தைகளால் மிரட்டும் தொனியில் பேசுகிறாா். இந்தத் தொட்டியில் தண்ணீா் பிடிக்க வரும் லாரிகள் மூலமாக இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகத் தண்ணீா் பிடித்து வருகிறோம். தற்போது, தண்ணீா் விடாமல் தடுக்கிறாா். எனவே, புலியகுளம் பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியில், பொதுமக்கள் தண்ணீா் பிடிக்கத் தனிக் குழாய் அமைத்துத் தர வேண்டும். சம்பந்தப்பட்ட ஊழியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com