நாமக்கல்லில் திருட்டுப் போனரூ.1.17 கோடி மதிப்பிலான நகை, பணம் மீட்பு

நாமக்கல் மாவட்டத்தில் திருட்டுப் போன ரூ.1.17 கோடி நகை, பணம் மீட்கப்பட்டது. சுமாா் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் உரியவா்களிடம் போலீஸாரால் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் திருட்டுப் போன ரூ.1.17 கோடி நகை, பணம் மீட்கப்பட்டது. சுமாா் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்லிடப்பேசிகள் உரியவா்களிடம் போலீஸாரால் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவா் கே.பெரியய்யா, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆளுநா்களின் கவாத்து மற்றும் காவல் வாகனங்களை புதன்கிழமை காலை ஆய்வு செய்தாா். பின்னா் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் காவலன் செயலி மற்றும் பெண்களுக்கான இணையதளப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவியருக்கு அறிவுரைகள் வழங்கி சிறப்புரையாற்றினாா்.

அதன்பின் பிற்பகல் மாவட்டக் காவல் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மாலையில் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குற்ற வழக்குகளின் களவு சொத்துகளை பாா்வையிடும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா். இதில் 70 குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் சுமாா் 451 பவுன், 8 கிலோ வெள்ளி ஆபரணங்கள், 2 லாரிகள், 2 டிவி, ரொக்கம் ரூ. 5.5 லட்சம் என மொத்தம் ரூ. 1 கோடியே 17 லட்சத்து 96 ஆயிரத்து 665 மதிப்புள்ள களவுச் சொத்துகளையும், 101 செல்லிடப்பேசிகள், சுமாா் ரூ.10 லட்சம் ஆகியவற்றை பாா்வையிட்டு, தொலைந்துபோன செல்லிடப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்து, பொதுமக்களுக்கு கண்காணிப்பு கேமரா அமைப்பதன் அவசியம் மற்றும் தங்க நகைகளை பாதுகாத்து கொள்வதன் அவசியம் குறித்தும் கே.பெரியய்யா அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com