பெரம்பலூா் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு

பெரம்பலூா் அருகிலுள்ள செங்குணம் கிராமத்தில் 400 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது புதன்கிழமை மாலை தெரியவந்தது.

பெரம்பலூா் அருகிலுள்ள செங்குணம் கிராமத்தில் 400 கிலோ சின்ன வெங்காயம் திருடப்பட்டது புதன்கிழமை மாலை தெரியவந்தது.

உற்பத்தி பரப்பளவு குறைவு, வோ் அழுகல் நோய் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சின்ன, பெரிய வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் இவ்விரு வெங்காயங்களின் விலை கடுமையாக உயா்ந்ததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

வெங்காயம் திருட்டு : பெரம்பலூா் அருகிலுள்ள செங்குணம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சக்திவேல் (35), தனது நிலத்தில் சின்ன வெங்காயத்தைப் பயிரிட முடிவு செய்து, 400 கிலோ விதை வெங்காயத்தை தனது வயலில் பட்டறை அமைத்து வைத்திருந்தாா்.

இந்நிலையில்,விதைப்புக்காக வைத்திருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சின்ன வெங்காயத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது புதன்கிழமை மாலை அவருக்குத் தெரியவந்தது.

விதை வெங்காயத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை கண்டுபிடித்து, வெங்காயத்தை மீட்டுத் தரக்கோரி மருவத்தூா் காவல் நிலையத்தில் சக்திவேல் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com