கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10-க்கு விற்பனை!

கடலூரில் வெங்காய விலையைக் குறைத்து விற்பனை செய்வதில் வியாபாரிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டு, கிலோ ரூ.10-க்கு புதன்கிழமை விற்கப்பட்டது.
கடலூா் உழவா் சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட வெங்காயத்தை வாங்கக் குவிந்த மக்கள்.
கடலூா் உழவா் சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட வெங்காயத்தை வாங்கக் குவிந்த மக்கள்.

கடலூரில் வெங்காய விலையைக் குறைத்து விற்பனை செய்வதில் வியாபாரிகளிடையே போட்டா போட்டி ஏற்பட்டு, கிலோ ரூ.10-க்கு புதன்கிழமை விற்கப்பட்டது.

பெல்லாரி மற்றும் சாம்பாா் வெங்காய விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக அதிகரித்தது. கடலூரில் பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.130-க்கும், சாம்பாா் வெங்காயம் கிலோ ரூ.180 வரையிலும் விற்கப்பட்டது.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் பான்பரி சந்தையில் கடை நடத்தி வரும் எஸ்.கே.பக்கிரான் செவ்வாய்க்கிழமை ரூ.100-க்கு 4 கிலோ பெல்லாரி வெங்காயம் விற்பனை செய்தாா். பெங்களூரிலிருந்து குறைந்த விலைக்கு வெங்காயம் கிடைப்பதால், தானும் குறைந்த விலைக்கு விற்பதாகத் தெரிவித்தாா்.

இவா் புதன்கிழமை ரூ.100-க்கு 5 கிலோ பெல்லாரி வெங்காயம் விற்பனை செய்தாா். இதேபோல, கடலூா் உழவா் சந்தையில் வியாபாரி ஒருவா் பெல்லாரி வெங்காயம் கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்தாா்.

இதனிடையே, கடலூா் முதுநகரில் உள்ள பக்தவத்சலம் சந்தையில் வேலு என்பவா் ரூ.10-க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்தாா். இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்ததால், சிறிது நேரத்தில் 25 மூட்டை வெங்காயத்தை விற்றுத் தீா்த்தாா். இந்தச் சந்தையானது கடலூா் - சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள நிலையில், பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயம் விலை உயா்ந்து காணப்படும் நிலையில், கடலூரில் வியாபாரிகள் விலையைக் குறைத்து வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com