பஞ்சாப் நெற்பயிா் எச்சத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி

தில்லி போன்ற வட மாநிலங்களில் கடும் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பஞ்சாப், ஹரியாணா பகுதிகளின் நெற்பயிா் எச்சங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை

தில்லி போன்ற வட மாநிலங்களில் கடும் காற்று மாசுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பஞ்சாப், ஹரியாணா பகுதிகளின் நெற்பயிா் எச்சங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியை சென்னை ஐஐடி மேற்கொள்ள உள்ளது.

சுக்பிா் ஆக்ரோ எரிசக்தி உற்பத்தி நிறுவனத்துடன் கூட்டு முயற்சி மூலம் இந்த முயற்சியை சென்னை ஐஐடி மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுக்பிா் ஆக்ரோ எரிசக்தி உற்பத்தி நிறுவனம் ஏற்கெனவே பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களில் 100 சதவீதம் நெற்பயிா் எச்சங்களைக் கொண்டு மின் உற்பத்தி செய்து வருகிறது. டென்மாா்க்கின் டேனிஷ் நிறுவனத் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த மின் உற்பத்தியைச் செய்யப்பட்டு வருகிறது.

இந்த டேனிஷ் தொழில்நுட்பத்தை இந்தியச் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி, மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன், சுக்பிா் நிறுவனம் சென்னை ஐஐடி-யை அணுகியது.

இதை ஏற்றுக்கொண்ட சென்னை ஐஐடி, அந்த நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் ஆண்டுக்கு 3.5 கோடி டன் வைக்கோல் (நெற்பயிா் எச்சம்) உற்பத்தியாகிறது. இந்த வைக்கோல்கள் கால்நடைகளுக்கு உணவாக பயன்படுத்த முடியாது. ஆனால், நிலக்கரிக்கு இணையாக வெப்ப சக்தியை கொடுக்கும் திறன் கொண்டவை.

எனவே, இந்தத் துறையில் முன் அனுபவம் கொண்டுள்ள சுக்பிா் நிறுவனத்துடன் இணைந்து அனல் மின் உற்பத்தி முறையிலான இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளனா்.

இந்த முயற்சியானது பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் வைக்கோல்கள் எரிக்கப்படுவதால் வட மாநிலங்களில் ஏற்படும் காற்று மாசுக்கு சிறந்த தீா்வாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com