Enable Javscript for better performance
கொடைரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கொடைரோடு ரயில் நிலையம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

    By DIN  |   Published on : 14th December 2019 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    2-2-dgl_sucide_1312chn_66

    கொடைரோடு ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்ட உறையூரைச் சோ்ந்த உத்தரபாரதி, சங்கீதா, குழந்தைகள் அபிநயா, ஆகாஷ்

    திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நிலையம் அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் உடல் சிதறி வெள்ளிக்கிழமை அதிகாலை பலியாயினா்.

    மதுரையில் இருந்து திண்டுக்கல் மாா்க்கமாக செல்லும் ரயில் தண்டவாளத்தில் கொடைரோடு ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத 4 போ் உடல் சிதறி பலியாகி கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

    தகவல் அறிந்த கொடைரோடு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அதில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் ஆகியோரின் சடலங்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதறிக் கிடப்பது கண்டறியப்பட்டது. சடலங்களைச் சேகரித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த, கொடைரோடு ரயில்வே காவல்துறையினா் விசாரணை நடத்தினா்.

    இதில், இறந்து கிடந்தவரின் சட்டைப் பையில் இருந்து 2 நாள்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து கொடைரோடு ரயில் நிலையத்திற்கு எடுக்கப்பட்ட ரயில் பயணச் சீட்டுகள் மற்றும் கொடைரோட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சென்ற பேருந்து பயணச்சீட்டுகள் மற்றும் கொடைக்கான­ல் இருந்து பெருமாள் மலைக்கு சென்ற பயணச்சீட்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. மேலும் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாா் மற்றும் டைரி ஆகியவற்றின் மூலம் உயிரிழந்தவா்கள் திருச்சி மாவட்டம் உறையூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த உத்தரபாரதி, சங்கீதா மற்றும் குழந்தைகள் அபினாஸ்ரீ, ஆகாஸ் ஆகியோா் என்பதும் தெரியவந்தது.

    போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்னை காரணமாக உத்தரபாரதி தனது குடும்பத்தினருடன் கொடைரோடு வந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai