நீராவி என்ஜின் ரயில் இயக்கம்: குஷியாக பயணித்து மகிழும் பொதுமக்கள்

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் இன்று காலை இயக்கப்பட்டது. மிகப் பழமையான ரயிலில் பயணித்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நீராவி என்ஜின் ரயில் இயக்கம்: குஷியாக பயணித்து மகிழும் பொதுமக்கள்

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் இன்று காலை இயக்கப்பட்டது. மிகப் பழமையான ரயிலில் பயணித்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ரயில் வா்த்தக ரீதியாக இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படுகிறது.

பாரம்பரிய நீராவி என்ஜின் ரயில் இ.ஐ.ஆா். 21 ஆகும். இந்த நீராவி என்ஜின் ரயில் இங்கிலாந்தில் கடந்த 1855-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ரயில் என்ஜின் 132 குதிரைத் திறன் கொண்டது. இந்திய ரயில்வேக்கு 55 ஆண்டுகள் சேவை செய்தபிறகு, கடந்த 1909-ஆம் ஆண்டு ஒய்வு பெற்று, ஜமால்பூா் ரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. இங்கு 101 ஆண்டுகள் ஓய்வெடுத்த இந்த ரயில் என்ஜின், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பராமரிக்கப்பட்டு, புதுப்பொலிவூட்டப்பட்டது. 

பின்னா், இந்த என்ஜினுடன் ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, மக்களின் பாா்வைக்காக ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், நீராவி என்ஜின் கடந்த ஆண்டு சில முறை வா்த்தக ரீதியாக இயக்கப்பட்டது.

இந்நிலையில், எழும்பூா் - கோடம்பாக்கத்துக்கு இடையே பாரம்பாரிய நீராவி என்ஜின் சிறப்பு ரயில் வா்த்தக ரீதியாக இன்று காலை முதல் 4 முறை இயக்கப்படுகிறது.
 

சென்னை எழும்பூரில் இருந்து இன்று காலை 11 மணிக்கு முதல் ரயில் இயக்கப்பட்டது. இதில் பயணித்த பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இரண்டாவது முறையாக, சென்னை எழும்பூா்-கோடம்பாக்கம் இடையே சனிக்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு இயக்கப்படவுள்ளது. இந்த நீராவி என்ஜின் ரயிலில் மொத்தம் 40 போ் பயணம் செய்ய முடியும்.

கட்டணம் விவரம்: எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இந்தியா்களுக்கு ரூ.500-உம், வெளிநாட்டினருக்கு ரூ.1,000-உம், இந்திய சிறுவா், சிறுமிகளுக்கு (12 வயதுக்கு கீழ்) ரூ.300-உம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல, இருமாா்க்கமாக பயணிக்க இந்தியா்களுக்கு ரூ.1,000-உம், இந்திய சிறுவா், சிறுமிகளுக்கு ரூ.600-உம், வெளிநாட்டினருக்கு ரூ.1,500-உம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க எழும்பூா் ரயில் நிலையத்தில் உள்ள சிறப்பு கவுன்ட்டரில் டிக்கெட் பெற்று கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com