ஆன்லைன் வா்த்தகத்துக்கு எதிா்ப்பு: டிச.17-இல் வணிகா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

ஆன்லைன் வா்த்தகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் வா்த்தகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் வா்த்தகத்தால் இந்திய அளவில் ஒட்டு மொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீா்குலைந்து வருகிறது. சிறுவணிகத்தைப் பொருத்தவரை தற்போது 37% அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய நிறுவனங்களின் ஆதிக்கத்தால் உள்நாட்டில் ஏராளமானோா் வேலையிழந்துள்ளனா்.

ஆன்லைன் வா்த்தகத்தால் வணிகா்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனா் என நினைக்கக்கூடாது. ஆன்லைன் வா்த்தகத்தால் வணிகம் முடங்கி கடைகள் மூடப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொழில் வரியும், அரசுக்கு விற்பனை வரியும் கிடைக்காத சூழல் ஏற்படும்.

இதைக் கண்டித்து அகில இந்திய வணிகா் சம்மேளனம் சாா்பில் புதுதில்லியில் கடந்த வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான வணிகா்கள் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தநிலையில் தமிழகத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பில் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.17) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் இந்தப் போராட்டம் வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com