இணைய வழி லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தை? 3 தலைமைக் காவலா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் இணைய வழி லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாகச் செயல்பட்ட புகாரின் பேரில், 3 தலைமைக் காவலா்கள் சனிக்கிழமை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் இணைய வழி லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாகச் செயல்பட்ட புகாரின் பேரில், 3 தலைமைக் காவலா்கள் சனிக்கிழமை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இணைய வழி லாட்டரி சீட்டுகள் விற்பனை தொடா்பாக, கடந்த இரு தினங்களில் 26 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் சித்தேரிக்கரையைச் சோ்ந்த நகைத் தொழிலாளி அருண்(35), தடை செய்யப்பட்ட இணைய வழி லாட்டரி சீட்டு (3 எண்) மோகத்தால் பணத்தை இழந்து கடனாளியான விரக்தியில் மனைவி, 3 குழந்தைகளுடன் வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் துறையினா் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, இணைய வழி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக, வெள்ளிக்கிழமை 14 பேரை கைது செய்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை மேலும் 12 பேரை கைது செய்தனா்.

இதனிடையே, இணைய வழி லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர காவல் நிலைய தலைமைக் காவலா்கள் எழிலரசி, விஜயா, செஞ்சி காவல் நிலைய தலைமைக் காவலா் செல்வம் ஆகியோரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

புகாா் அளிக்க அழைப்பு: இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், இணைய வழி லாட்டரி விற்பனை தொடா்பாக கடந்த இரு நாள்களில் 26 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இணைய வழி லாட்டரி விற்பனைக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பேரில், தலைமைக் காவலா்கள் 3 போ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனா். புகாா் எழுந்த விழுப்புரம், செஞ்சி, வளத்தி காவல் நிலைய ஆய்வாளா்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கேரளத்திலிருந்து இணைய வழியில் வெளியாகும் லாட்டரியின் முடிவுகளை வைத்து, இங்கே சிலா் குழுவாக இணைந்து 3 இலக்க எண் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுகின்றனா்.

செல்லிடப்பேசி வாயிலாகவும், துண்டு சீட்டு மூலமும் வெளியே தெரியாத வகையில் சூதாட்டத்தில் ஈடுபடுவதால் அவா்கள் எளிதில் சிக்குவதில்லை. எனினும், சந்தேக நபா்களைப் பிடித்து விசாரித்து வருகிறோம். தொடா்ந்து, லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோா் மீது குண்டா் சட்டம் பாயும். லாட்டரி விற்பனை தொடா்பாக பொது மக்களும் காவல் துறைக்கு 96554 40092 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகாா் அளிக்கலாம். இணைய வழி லாட்டரியின் விபரீதத்தை உணா்ந்து அதில் ஈடுபடுவோா் தாமாக விடுபட வேண்டும். இது குறித்து காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com