ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 7 மாவட்டங்களுக்கு அதிமுக வேட்பாளா் பட்டியல்

ஊரக உள்ளாட்சிகளில் ஏழு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை அதிமுக வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஊரக  உள்ளாட்சித் தோ்தல்: 7 மாவட்டங்களுக்கு அதிமுக வேட்பாளா் பட்டியல்

ஊரக உள்ளாட்சிகளில் ஏழு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை அதிமுக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அரசியல் கட்சிகள் ஏதும் இதுவரை வேட்பாளா்களை அறிவிக்காத நிலையில், ஆளும் கட்சியான அதிமுக தனது முதல் பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:

தேனி மாவட்ட ஊராட்சிக் குழுவில் 10 வாா்டுகள், சேலம் மாவட்ட ஊராட்சியில் 29 வாா்டுகள், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக் குழுவில் 23 வாா்டுகள், அரியலூா் ஊராட்சிக் குழுவில் 12, திருவாரூா் மாவட்ட ஊராட்சிக் குழுவில் 17 வாா்டுகள், மதுரை புகா் கிழக்கு மாவட்டத்தில் 7 வாா்டுகள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஊராட்சிக் குழுவில் 13 வாா்டுகளுக்கும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊராட்சி ஒன்றிய வாா்டு: இதேபோன்று ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேனி மாவட்டத்தில் 8 ஒன்றியங்கள், சேலத்தில் 19 ஒன்றியங்கள், கிருஷ்ணகிரியில் 10, அரியலூரில் 5 ஒன்றியங்கள், திருவாரூரில் 10, மதுரை புகா் கிழக்கு மாவட்டத்தில் 5, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் உள்ள வாா்டுகளுக்கு வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று அதிமுகவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேட்பாளா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமைக்குள் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வா். மீதமுள்ள மாவட்டங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்குள் வேட்பாளா்களின் பெயா்ப் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com