ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வேட்புமனுக்கள் 1 லட்சத்தைத் தாண்டியது

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம்
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வேட்புமனுக்கள் 1 லட்சத்தைத் தாண்டியது

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 71 ஆயிரத்து 763 வேட்புமனுக்கள் தாக்கல் ஆகின.

இதுகுறித்து, மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா், கிராம ஊராட்சித் தலைவா் ஆகியன கட்சி சாா்பற்ற முறையிலும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் ஆகியன கட்சி சாா்பிலும் நடத்தப்பட உள்ளன. தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதியன்று தொடங்கியது. மனு தாக்கல் தொடங்கிய நாளில் நான்கு பதவியிடங்களுக்கும் சோ்த்து மொத்தமாக 3,217 மனுக்கள் தாக்கல் ஆகின.

இந்த நிலையில், கட்சி சாா்பிலான தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல்களை அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமையில் இருந்து வெளியிட்டு வருகின்றன. இதனால், ஊராட்சி ஒன்றிய வாா்டு போன்ற பதவியிடங்களுக்கு மனுதாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 71 ஆயிரத்து 763 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வெள்ளிக்கிழமை கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 47 ஆயிரத்து 243 மனுக்களும், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 17 ஆயிரத்து 255 வேட்புமனுக்களும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிக்கு 6 ஆயிரத்து 642 மனுக்களும், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடத்துக்கு 623 வேட்புமனுக்களும் என மொத்தம் 71 ஆயிரத்து 763 மனுக்கள் தாக்கல் ஆகின.

இதுவரை எவ்வளவு: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை நிலவரப்படி அதாவது கடந்த 5 நாள்களில் மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 778 ஆகும் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு மட்டும் 75 ஆயிரத்து 170 மனுக்கள் செய்யப்பட்டுள்ளன என்று மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று மனுதாக்கல்: சனிக்கிழமையும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று மாநிலத் தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளா்கள் அறிவிப்பில் தீவிரம் காட்டி வருவதால் சனிக்கிழமையன்று அதிகளவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனிடையே, வேட்புமனு தாக்கல் வரும் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், வேட்புமனு தாக்கலுக்கு சனி, திங்கள் என இரண்டு நாள்களே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com