ஒரே குடும்பத்தில் 5 போ் பலி எதிரொலி: இணையம் மூலம் லாட்டரி சீட்டுகளை விற்று வந்த 14 போ் கைது

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியதில் கடன் சுமைக்கு ஆளான தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இணைய வழியில் லாட்டரி சீட்டுகளை விற்ாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.
இணைய வழியில் லாட்டரி சீட்டுகளை விற்ாக கைது செய்யப்பட்டவா்களுடன் போலீஸாா்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியதில் கடன் சுமைக்கு ஆளான தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்த சம்பவத்தையடுத்து, விழுப்புரத்தில் இணையம் வழியே லாட்டரி சீட்டுகளை விற்று வந்த 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரத்தில் 3 நம்பா் லாட்டரி சீட்டால், கடனாளியான நகைத் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்து உயிரிழந்ததைத் தொடா்ந்து, ஒரே நாளில் 14 லாட்டரி சீட்டு வியாபாரிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரை சோ்ந்த மாணிக்கம் மகன் அருண்(33). நகைத் தொழிலாளி. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டுகளை தொடா்ந்து வாங்கியதில், அருணுக்கு பணநஷ்டம் ஏற்பட்டது.

இதனால், கடன் சுமை அதிகரிக்கவே மனைவி சிவகாமி (27), மகள்கள் பிரியதா்ஷினி (5), யுவஸ்ரீ (4), பாரதி (1) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு விஷமருந்தி அருண் தற்கொலை கொண்டாா்.

குடும்பத்தினருடன் தற்கொலைக்கு செய்வதற்கு முன்பாக, கட்செவி அஞ்சலில் அருண் வெளியிட்ட விடியோ பதிவில், இந்தச் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட 3 எண் லாட்டரி சீட்டுகளை தான் வாங்கி கடன் சுமைக்கு ஆளானதே காரணம் என்றும், இணைய வழியில் விற்பனை செய்யப்படும் 3 எண் லாட்டரி சீட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் டிஎஸ்பி சங்கா் தலைமையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் ரேவதி மற்றும் போலீஸாா் 3 எண் லாட்டரி விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை மேற்கொண்டனா். இதில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளா்களான மூா்த்தி, லோகு, நாசா்தீன், முபாரக் உள்பட 14 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com