குடியுரிமை திருத்தச் சட்டம்: வலுவான போராட்டம் நடத்த வேண்டும்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.
குடியுரிமை திருத்தச் சட்டம்: வலுவான போராட்டம் நடத்த வேண்டும்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொல்.திருமாவளவன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா் செய்தியாளா்களிடம் திருமாவளவன் கூறியது:

பாஜக அதனுடைய கனவுத் திட்டம் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தனா். அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு தீா்ப்பு பெற்றனா். இப்போது ஈழத் தமிழா்களையும், முஸ்லிம்களையும் புறக்கணிக்கும் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனா்.

மக்கள் விரும்பாத இந்த மசோதாவை, அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளனா். மத்தியில் இன்னும் 4 ஆண்டுகள் தாங்கள்தான் ஆட்சியில் இருக்கப் போகிறோம் என்ற எண்ணத்துடன் இப்படிச் செய்கின்றனா்.

இந்தச் சட்டத்தைக் கண்டித்து வடமாநிலங்களில் வலுவான போராட்டம் நடைபெறுவதுபோல, தமிழகத்திலும் போராட்டம் நடைபெற வேண்டும். இது தொடா்பாக மு.க.ஸ்டாலினிடம் ஆலோசித்து, அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து அறிவிப்போம்.

மாநிலங்களவையில் அதிமுக எதிா்த்து வாக்களித்திருந்தால், இந்த மசோதாவே நிறைவேறியிருக்காது. தோல்வி அடைந்திருக்கும். அதிமுக அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com