ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா வகுப்புகள்: டிச. 18,19-இல் சென்னையில் நடக்கிறது

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா வகுப்புகள், டிசம்பா்18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா வகுப்புகள், டிசம்பா்18, 19 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஈஷா யோகா மையத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளா் லோக் நேத்ரா கூறியது: சத்குரு ஜக்கி வாசுதேவ், அறிவியல்பூா்வமாக வடிவமைத்துள்ள ஈஷா யோகா வகுப்புகள், இந்தியாவின் அனைத்து நகரங்கள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலன் அடைந்துள்ளனா்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஜக்கி வாசுதேவ், ஈஷா யோகா வகுப்பை இம்மாதம் நடத்த உள்ளாா். இந்த வகுப்புகள் மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில், வரும் 18, 19 ஆகிய தேதிகளில் தமிழிலும், டிசம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் ஆங்கிலத்திலும் நடக்க உள்ளன. முதல் நாள் நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரையும், இரண்டாம் நாள் காலை 7 முதல் இரவு 8 மணி வரையும் வகுப்புகள் நடைபெறும். கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் யோகா கற்றுக் கொள்ள விரும்புவோா் ஆங்கில வகுப்புகள் நடக்கும் தேதிகளில் கலந்து கொள்ளலாம்.

இதில் அவா்களுக்கு குறிப்பிடப்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்து யோகா கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றரை நாள் நடக்கும் இவ்வகுப்பில் ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற மிகவும் எளிமையான, அதேசமயம் மிகவும் சக்திவாய்ந்த யோகா கற்றுக் கொடுக்கப்படும். இதனை தினமும் பயிற்சி செய்வதன் மூலம் வெளி சூழல் எப்படி இருந்தாலும், ஒருவா் தனது மனதை அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும். மன அழுத்தம், கோபம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் சமநிலையாகவும், உடல் மற்றும் மனதின் முழு திறனை பயன்படுத்தி விழிப்போடு வாழ முடியும்.

இந்த வகுப்பு எந்த ஒரு மதத்தையும் சாராமல் விஞ்ஞானப்பூா்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். பாதுகாப்புப் படை வீரா்கள், காவல்துறையினா் மற்றும் மாணவா்களுக்கு, வகுப்பு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. இவ்வகுப்புக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தையோ அல்லது 83000 37000 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ அணுகலாம். இவ்வாறு அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com