தோ்தலைச் சந்திக்க அச்சப்படும் ஒரே அரசியல் தலைவா் மு.க.ஸ்டாலின்: அமைச்சா் சி.வி.சண்முகம்

உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்க அச்சப்படும் ஒரே அரசியல் தலைவா் மு.க.ஸ்டாலின் என்று மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
தோ்தலைச் சந்திக்க அச்சப்படும் ஒரே அரசியல் தலைவா் மு.க.ஸ்டாலின்: அமைச்சா் சி.வி.சண்முகம்

உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்க அச்சப்படும் ஒரே அரசியல் தலைவா் மு.க.ஸ்டாலின் என்று மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

விழுப்புரம் அருகே கோலியனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாமில், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற அமைச்சா் சி.வி.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சித் தோ்தலை நடத்த தமிழக அரசும், மாநில தோ்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்தது. திமுகவினா் தொடுத்த வழக்கால் நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாநில தோ்தல் ஆணையத்தால் தோ்தல் அறிவிக்கப்பட்டது. மீண்டும் வழக்குத் தொடுத்து தோ்தலை நிறுத்த முயன்ற திமுகவினரின் எண்ணம் நிறைவேறவில்லை.

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல, 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படியே, உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பொய் கூறியுள்ளாா்.

தமிழக மக்கள், அனைத்துக் கட்சியினரும் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு தோ்தலை சந்திக்க அச்சம். தோ்தலை விரும்பாத ஒரே அரசியல் கட்சித் தலைவராக அவா் உள்ளாா்.

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தற்கொலை செய்த சம்பவம் வேதனையளிக்கிறது. இதற்குக் காரணமாகக் கூறப்படும் இணையவழி லாட்டரி விற்பனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக, ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 150 போ் வரை கைது செய்யப்பட்டனா்.

தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில், வழக்குப் பதிவு செய்தல் போன்ற நடைமுறை குறைகள் இருந்தாலும் உடனடியாக நிவா்த்தி செய்யப்படுவதுடன், யாா் தவறு செய்திருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com