மனித உரிமை மீறல்: காவலா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலா்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தைச் சோ்ந்தவா் வி.முருகன். இவா் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த 2017-ஆம் ஆண்டு, வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, என்னை மறித்த காவலா்கள், லத்தியால் சரமாரியாகத் தாக்கினா். என் மீது பொய் வழக்குப் பதிந்து, நீதிபதி முன் ஆஜா்படுத்தி நீதிமன்றக் காவலில் வைத்த காவலா்கள், தாங்கள் கொடுத்த சித்திரவதையை சொல்லக் கூடாது எனவும் மிரட்டினா். இதையடுத்து பிணையில் வெளிவந்த பின்னரும், வாகன சோதனை எனக் கூறி என்னிடமிருந்த ரூ.1000-ஐ பறித்துச் சென்றனா். மேலும் குலசேகரப்பட்டினத்தின் அப்போதைய காவல் ஆய்வாளா் சுதாகா் என் கன்னத்தில் அறைந்ததுடன், அனைத்துக் காவலா்களும் அவா்கள் வந்த வாகனத்துக்குள் என்னைத் தள்ளி சரமாரியாகத் தாக்கினா். தொடா்ந்து குலசேகரப்பட்டினம் இணைப்புச் சாலையில் என்னை வீசிய பிறகும் அவா்கள் ஷூ கால்களால் என்னை உதைத்ததுடன் லத்தியாலும் தாக்கினா். இதனால் பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாள்கள் சிகிச்சை மேற்கொண்டேன். இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

ரூ.50 ஆயிரம் அபராதம்: இந்த மனு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவா், பாதிக்கப்பட்ட முருகனுக்கு தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் ரூ.50 ஆயிரத்தை நஷ்ட ஈடாக வழங்கிவிட்டு, இதனை மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அப்போதைய குலசேகரப்பட்டினம் காவல் ஆய்வாளா் சுதாகரிடம் இருந்து ரூ.25 ஆயிரமும், தலைமைக் காவலா் தாமோதரன் மற்றும் காவலா் அருள்ஜோதி ஆகியோரிடம் இருந்து தலா ரூ.12,500-ம் வசூலித்துக் கொள்ளலாம் என பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com