உள்ளாட்சித் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் 34 மாவட்டங்களின் விவரங்களை திமுக தலைமை அலுவலகம்
உள்ளாட்சித் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் வெளியீடு


சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் 34 மாவட்டங்களின் விவரங்களை திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

வருகிற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த மாவட்டக் கழகங்கள் சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 34 மாவட்டங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில், கழக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1. திருவண்ணாமலை வடக்கு 
2. திருவண்ணாமலை தெற்கு
3. திருச்சி வடக்கு
4. திருச்சி தெற்கு
5. கரூர்,
6. சேலம் மத்திய, 
6. சேலம் மேற்கு
7. கோவை தெற்கு
8. நீலகிரி,
9. மதுரை வடக்கு
10. மதுரை தெற்கு
11. தூத்துக்குடி வடக்கு
12. தூத்துக்குடி தெற்கு
13. கன்னியாகுமரி கிழக்கு 
14. திருவள்ளூர் வடக்கு 
15. கடலூர் கிழக்கு 
16. கடலூர் மேற்கு 
17. தஞ்சை வடக்கு
18. தஞ்சை தெற்கு
19. நாகை வடக்கு
20. புதுக்கோட்டை தெற்கு
21. கோவை வடக்கு 
22. திருப்பூர் வடக்கு 
23. திருப்பூர் தெற்கு 
24. சேலம் கிழக்கு 
25. ஈரோடு தெற்கு
26. தருமபுரி
27. திண்டுக்கல் கிழக்கு
28. திண்டுக்கல் மேற்கு
29. மதுரை மாநகர் 
30. புதுக்கோட்டை வடக்கு
31. பெரம்பலூர்
32. கிருஷ்ணகிரி கிழக்கு
33. விருதுநகர் வடக்கு

மற்ற மாவட்டக் கழகங்கள் சார்பில் தோழமைக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. விரைந்து அந்தந்த மாவட்டக் கழகங்கள் சார்பில் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com