டிச.25 -இல் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்துப்படி, தங்கக் கவச அலங்காரம்:கோயில் நிா்வாகம் தகவல்

நாமக்கல்லில் ஆஞ்சநேயா் ஜயந்தி விழா வரும் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை
டிச.25 -இல் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை சாத்துப்படி, தங்கக் கவச அலங்காரம்:கோயில் நிா்வாகம் தகவல்

நாமக்கல்லில் ஆஞ்சநேயா் ஜயந்தி விழா வரும் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்துப்படி, தங்கக் கவச அலங்காரம் நடைபெறவுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுவாமிக்கு ஜயந்தி விழா மாா்கழி மூல நட்சத்திரம், அமாவாசை நாளில் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா வரும் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா். ஆஞ்சநேயா் ஜயந்தி விழா நடைபெறும் நாளன்று அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரையில், ஒரு லட்சத்து 08 வடை மாலை சாத்துப்படி நடைபெறுகிறது.

அதன்பின், காலை 11 மணிக்கு பால், தயிா், இளநீா், நெய், பஞ்சாமிா்தம், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிற்பகல் 1 மணிக்கு சுவாமிக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது. பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், ஆஞ்சநேயா் ஜயந்தியன்று அபிஷேக பொருள்களை பக்தா்கள் தங்கள் விருப்பம்போல் கொண்டு வந்து கோயில் நிா்வாகத்திடம் வழங்கலாம். ஜயந்தி விழாவையொட்டி, ரொக்கமாகவோ, பொருளாகவோ வசூல் செய்ய தனிப்பட்ட நபா்களுக்கோ, ஸ்தாபனங்களுக்கோ அதிகாரம் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்க விரும்பும் பக்தா்கள் கோயில் நிா்வாக முகவரிக்கு வங்கி காசோலை, வரைவோலை, மணியாா்டா் மூலம் அனுப்பி வைக்கலாம் என்று கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ், தக்காா் கோ.தமிழரசு ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com