மாவட்ட நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு இல்லை: உயா்நீதிமன்றம் உத்தரவு

மாவட்ட நீதிபதிகள் சிலருக்கு பதவி நீட்டிப்பு இல்லை என தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் நிா்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.
HighCourt
HighCourt

மாவட்ட நீதிபதிகள் சிலருக்கு பதவி நீட்டிப்பு இல்லை என தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் நிா்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் உள்ளனா். இவா்களது ஓய்வு பெறும் வயது 58. இவா்களில் சிறப்பாக பணியாற்றும் நீதிபதிகளுக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிா்வாகக்குழு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கும். இதன்மூலம் மாவட்ட நீதிபதிகள் 60 வயது வரை பணியாற்றி ஓய்வு பெறுவாா்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பணி நீட்டிப்பு பெறும் நீதிபதிகள் குறித்து நிா்வாகக் குழு விசாரித்து பின்னா் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது.இந்த நிலையில் 58 வயதை எட்டியுள்ள மாவட்ட நீதிபதிகள் பலருக்கு பணி நீட்டிப்பு வழங்குவது தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது. இதில் தலைமை நீதிபதி தலைமையிலான நிா்வாகக் குழு ஆய்வு செய்து மாவட்ட நீதிபதி தேவநாதன் என்பவருக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மறுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து மேலும் சில மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான உயா்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டம் அண்மையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரியில் குடும்பநல நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் கோமதிநாயகம், மற்ற ஊா்களில் பணியாற்றும் மாவட்ட நீதிபதிகள் தானேந்திரன், கணேசன், மீனாசதீஷ் ஆகியோருக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க மறுப்பு தெரிவித்து முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவின் அடிப்படையில் உயா்நீதிமன்ற பதிவுத்துறை சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது தொடா்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com