ராசிபுரம் பகுதியில் உடல் நலனை வலியுறுத்தி மெகா மாரத்தான் ஒட்டம்: 1200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் உடல் நலனை வலியுறுத்தியும், நடை பயிற்சியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெகா
ஆர்வத்துடன் ஒடி விழிப்புணர்வு ஏற்படுத்திய 90 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள்
ஆர்வத்துடன் ஒடி விழிப்புணர்வு ஏற்படுத்திய 90 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள்


நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் உடல் நலனை வலியுறுத்தியும், நடை பயிற்சியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெகா மாரத்தான் ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. ராசிபுரம் ரோட்டரி சங்கம் சார்பில்  அகில இந்திய அளவிலான இந்த மெகா மராத்தான் ஒட்டம்  காலை 5 மணி அளவில் ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு  கலை அறிவியல் கல்லூரி முன்பாக துவங்கி பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் டெல்லி, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்தும், சென்னை, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒட்டப்பந்தய வீரர்கள் சுமார் 1200-க்கும் மேற்பட்டோர்  பங்கேற்கின்றனர். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கு நடைபயிற்சி, ஒட்டப்பயிற்சி போன்றவற்றின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த மாரத்தான் ஒட்டம் 3-ம் ஆண்டாக நடத்தப்படுகிறது.  இப்போட்டிகளை ராசிபுரம் ரோட்டரி சங்கம்- ராசி இன்டர்நேஷனல் பள்ளி ஆகியன இணைந்து நடத்தின.

முன்னதாக 21 கி.மீ., ஒட்டம், 10 கி.மீ. ஒட்டம், 5 கி.மீ. ஒட்டம், 3 கி.மீ. ஒட்டம் என மாரத்தான் ஒட்டம்  என பல்வேறு பிரிவுகளில்  நடைபெற்றது. 16 வயதிற்கு மேற்பட்டோர் 21 கி.மீ. தொலைவு ஒட்டத்திலும், 12 வயதிற்கு மேற்பட்டோர் 10 கீ.மீ.  தொலைவு ஒட்டத்தில், 6 வயதிற்கு மேற்பட்டோர் 3 கி.மீ., 5 கி.மீ. ஒட்டத்திலும் பங்கேற்றனர். 21 கி.மீ., ஒட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.  போட்டிகளில் 21 கீ.மீ.  ஆடவருக்கான ஒட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சிங் என்ற இளைஞர் 1 மணிநேரம் 16 நிமிடத்தில் முடித்து முதலிடம் பெற்றார்.

கோவை வினோத் குமார் 1 மணிநேரம் 17 நிமிடத்தில் 2-ம் இடமும், திருச்சி வினித்-1 மணி நேரம் 20 நிமிடத்தில் முடித்து 3-ம் இடம் பெற்றனர்.  மகளிர் பிரிவில் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஆஷா என்ற பெண் 1 மணி நேரம் 24 நிமிடத்தில் ஒடி முடித்து முதலிடம் பிடித்தனர். சென்னை கே.கீதா 1 மணிநேரம் 29 நிமிடத்தில் 2-ம் இடமும், ராசிபுரம் கே.சுகுணா 1மணி நேரம் 38 நிமிடத்தில் முடித்து 3-ம் இடமும் பெற்றனர்.10 கீ.மீ. மகளிர் பிரிவில் வினிதா மாணிக்கம் முதலிடமும்,ஆடவர் பிரிவில் வி.மெளனிஷ் முதலிடமும் பெற்றனர். 5 கி.மீ. ஆடவர் பிரிவில் மரிஷாரத் முதலிடமும், மகளிர் பிரிவில் ஏ.யோகலட்சுமி முதலிடமும் பெற்றனர்.  

இதே போல் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கோவையை சேர்ந்த 92 வயதான பேராசிரியர் ஏ.தேவராஜ், 82 வயதான ரவிவெங்டேசன்  உள்ளிட்ட முதியவர்கள் மூவர் 10 கி.மீ. தொலைவு ஒட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றது பார்வையாளர்கள் அனைவருக்கும் ஒட்டப்பயிற்சியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்தது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில், ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.திருமூர்த்தி தலைமை வகித்தார்.ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு.ஏ.கே.நடேசன், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு.ஏ.கே.பி.சின்ராஜ் உள்ளிட்ட ரோட்டரி நிர்வாகிகள் பலர் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com