குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி 23ம் தேதி திமுக பேரணி: ஸ்டாலின்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் வரும் 23ம் தேதி திமுக சார்பில் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்


சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் வரும் 23ம் தேதி திமுக சார்பில் பேரணி நடத்தப்படும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

மேலும், இதே கருத்தை வலியுறுத்தி சென்னையில் வரும் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சிகளின் பேரணி தொடங்கும். இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிகளும், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு அகில இந்திய அளவில் எதிர்ப்பு இருக்கிறது. எனவே இதற்குப் பிறகாவது மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.

நாட்டில் அமைதியை குலைக்கும் சட்டமாக இந்த திருத்தச் சட்டம் அமைந்திருக்கிறது. அண்டை நாடுகள் பட்டியலில் இலங்கை விடுபட்டிருப்பது ஏன்? அகதிகளாக வரும் மக்களில் இஸ்லாமியர்களை மட்டும் பிரிப்பது ஏன்?

தமிழின துரோகிகளாக அதிமுகவினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அவர்களை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தை எடுத்து செல்வது பற்றி மீண்டும் ஒன்று கூடி ஆலோசனை நடத்துவோம் என்று ஸ்டாலின் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com