ரயில்வே கிடங்கில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சலில் கையெறி குண்டுகள்: ஏலம் விட பிரித்த போது அதிர்ச்சி

ரயில்வே கிடங்கில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சலை ஏலம் விட பிரித்த போது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரயில்வே கிடங்கில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சலில் கையெறி குண்டுகள்: ஏலம் விட பிரித்த போது அதிர்ச்சி


சென்னை: ரயில்வே கிடங்கில் கேட்பாரற்றுக் கிடந்த பார்சலை ஏலம் விட பிரித்த போது அதில் 10 கையெறி குண்டுகள் இருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னைக்கு ரயிலில் ஒரு பார்சல் வந்தது. ஆனால் அதனை யாரும் வாங்க வராததால், ரயில்வே கிடங்கில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேல் ஆனதால், அந்த பார்சலைப் பிரித்து, அதில் இருக்கும் பொருட்களை ஏலம் விட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

அந்தப் பார்சலை பிரித்துப் பார்த்த போது, யாரும் எதிர்பாராத வகையில், அதில் ராணுவத்தினர் பயன்படுத்தும் கையெறி குண்டுகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் இருந்து 172வது பட்டாலியனான அந்தமானுக்கு செல்ல வேண்டிய பார்சல், அதற்கு பதிலாக முகவரி மாறி 72வது பட்டாலியனான சென்னைக்கு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த கையெறி குண்டுகள் ரயில் மூலம் பார்சலில் வந்த நிலையில், அதனை வாங்காமல் இருந்த ராணுவத்தினர், மிகப்பெரிய தொகையை அபராதமாக செலுத்தினால் மட்டுமே, கையெறி குண்டுகளை வழங்க ரயில்வே நிர்வாகம்முடிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com