ஆதிக்க சாதி மிரட்டல்: வேட்புமனுவை திரும்பப் பெறவும், தேர்தலை புறக்கணிக்கவும் தலித் கிராமம் முடிவு

தஞ்சாவூரில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிப்பவர்கள், பிரதான கிராமத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் தங்கள் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதாக குற்றம்சாட்டினர். 
ஆதிக்க சாதி மிரட்டல்: வேட்புமனுவை திரும்பப் பெறவும், தேர்தலை புறக்கணிக்கவும் தலித் கிராமம் முடிவு

எஸ்சிக்கு ஒதுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து, தஞ்சாவூரில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிப்பவர்கள், பிரதான கிராமத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களால் தங்கள் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதாக குற்றம்சாட்டினர். எனவே, வேட்புமனுவை திரும்பப் பெற்று, தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

குலமங்கலம் பஞ்சாயத்து இரண்டு குடியேற்றங்களைக் கொண்டுள்ளது - குலமங்கலம் பிரதான கிராமம் மற்றும் தான்தோனியின் குக்கிராமம். இங்கு இதுவரை பொதுப்பிரிவில் இருந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, இந்த முறை எஸ்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்து தலைவரை குலமங்கலத்தைச் சேர்ந்தவராகவும், துணைத் தலைவரை தான்தோனியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துள்ளனர். இந்த முறை, குளத்தின் ஒரு பகுதியை ஏலம் விடுவது போன்ற தீர்க்கப்படாத சில பிரச்னைகள் காரணமாக, கிராம பஞ்சாயத்து தலைவர் வேட்பாளரை பரிந்துரைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதன் காரணமாக இரு கிராமங்களும் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்தன.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாளான திங்கள்கிழமை, கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய தான்தோனியைச் சேர்ந்தவர்கள் குலமங்கலம் கிராமத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. வேட்பு மனு திரும்பப் பெற வேண்டும் என்று அவர்களை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான்தோனி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தஞ்சாவூர் ஆட்சியரிடம் நிலைமையை விளக்கி மனுவை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தனர்.

அதில், தங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியும், வேட்பு மனுவை திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல் தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com