குடியுரிமைச் சட்டத்தில் இல்லாத இரட்டைக் குடியுரிமையை முதல்வர் எப்படி வலியுறுத்துவார்? ஸ்டாலின்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லாத இரட்டைக் குடியுரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி வலியுறுத்துவார்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்


சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லாத இரட்டைக் குடியுரிமையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படி வலியுறுத்துவார்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மு.க. ஸ்டாலின், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சியில் இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்காக உழைக்கும் கட்சியாக திமுக விளங்குகிறது.

சென்னையில் வரும் 23ம் தேதி தமிழகமே இதுவரை சந்தித்திருக்காத வகையில் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். திமுக தலைமையில் நடைபெறும் பேரணிக்குப் பிறகும் குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு இறங்கிவராவிட்டால்  போராட்டம் வலுப்பெறும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவேன் என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லாத இரட்டைக் குடியுரிமையை முதல்வர் பழனிசாமி எப்படி வலியுறுத்த முடியும்?

யார் பொய் சொல்கிறார்கள்? யார் மக்களுக்காகப் போராடுகிறார்கள் என்பது மக்களுக்கே தெரியும் என்று ஸ்டாலின் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com