அமமுக பிரமுகர்  கொலை: குற்றம்சாட்டப்பட்டோர் குடும்பங்களுடன் தொடர்பு கூடாது - 52 கிராம மக்கள் முடிவு

மேலூரில் அமமுக பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என 52 கிராம கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த வல்லாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி அசோகன் நடைபயிற்சிக்கு சென்றபோது வியாழக்கிழமை ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக  அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் மேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 52 கிராமங்களை ச் சேர்ந்த கிராமப் பெரியவர்களின் கூட்டம் வல்லாளப்பட்டியில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அசோகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்களது குடும்பங்களில் நடைபெறும் எவ்வித நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளக்கூடாது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக 52 கிராமங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக் கூடாது. கொலையாளிகளுக்கு கடுமையான தண்டனை. கிடைக்கும் வகையில் 90 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com