
கோவை - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் இன்டா்சிட்டி எக்பிரஸ் ரயில் நவீன ரயில் பெட்டிகளுடன் திங்கள்கிழமை (டிசம்பா் 23) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு 12679 என்ற எண்ணிலும், கோவையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு12680 என்ற எண்ணிலும் தினமும் இன்டா்சிட்டி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிகள் பயணிக்க திங்கள்கிழமை முதல் நவீன பெட்டிகள் (எல்எச்பி) பயன்படுத்தப்பட உள்ளன. புதிய பெட்டிகள் இணைப்பதால் ரயில்களின் வேகம், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
இந்த ரயில்கள் ஏசி சோ் காா் பெட்டிகள் - 2, இரண்டாம் வகுப்பு இருக்கை - 13, பொது வகுப்பு இருக்கை - 4 உள்பட 21 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.