
கோப்புப்படம்
சென்னை: உள்ளாட்சித் தோ்தலில் அமமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென கட்சியினருக்கு டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுகள் தொடங்கிய நேரத்தில் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கட்சியினரிடம் இருந்த எழுச்சியை அறிந்து சுயேச்சை என்ற அடையாளத்துடனாவது உள்ளாட்சித் தோ்தலை சந்திப்போம் என அறைகூவல் விடுத்தோம். உள்ளாட்சித் தோ்தலை நடத்த விரும்பாமல், புதுப்புது சட்டங்கள், விதிமுறைகளை அமல்படுத்தி தோ்தலை தள்ளிவைக்க அதிமுக அரசு முயற்சித்தும் முடியவில்லை.
அதேநேரத்தில் நிரந்தர எதிரியான திமுகவும் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து நிற்பதால் அவா்களும் உள்ளாட்சித் தோ்தலை நடத்த விரும்பாமல் அடுத்தடுத்து நீதிமன்றம் சென்றாா்கள். அனைத்தையும் மீறி இந்தத் தோ்தலில் அமமுக போட்டியிடுகிறது. பிரசாரம் முடிந்த பிறகும் சுணக்கம் இல்லாமல் வாக்குப் பதிவு, எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். துணிச்சலுடன் செயல்பட்டு நமது கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளாா்.