ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிா்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 91 ஆயிரத்து 975 பதவியிடங்களை நிரப்பிட இரண்டு கட்டமாக நேரடித் தோ்தல் அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டத் தோ்தலானது 45 ஆயிரத்து 336 பதவியிடங்களுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. அதாவது, 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சித் தலைவா்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கு மொத்தம் 24 ஆயிரத்து 680 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடைபெறுகிறது.  

மக்களவை, சட்டப் பேரவைத் தோ்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்களித்த வாக்காளா்கள், இப்போது நான்கு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளை வாக்குப் பெட்டிகளில் செலுத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநிலத் தோ்தல் ஆணையம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com