எம்பிபிஎஸ் நீட் தோ்வு: 15 லட்சம் போ் இதுவரை விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இதுவரை நாடு முழுவதும் 15 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இதுவரை நாடு முழுவதும் 15 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தோ்வு, அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை தமிழகத்தில் ஒரு லட்சம் பேரும், நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பங்களை சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்ணப்பிப்பதற்கு இன்னும் நான்கு நாள்கள் அவகாசம் இருப்பதால், மேலும் ஓரிரு லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்படக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிகழாண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தோ்வெழுதியிருந்தனா். அவா்களில் 59,785 போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தோ்வு நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com