2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61.45% வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61.45% வாக்குப்பதிவு
2-ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 61.45% வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைய உள்ளது. 

27 மாவட்டங்களில், மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான 255 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கான 2,544 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,924 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான 38,916 பதவியிடங்களுக்கும் என மொத்தம் 46,639 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 25,008 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. 1 கோடியே 28 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். பாதுகாப்புப் பணியில் 61 ஆயிரம் போலீஸாா், முன்னாள் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா். 1,551 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதில் காலை 9 மணி நிலவரப்படி 10.41 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு நிலவரங்கள்: 

மதுரை - 8.12%
கோவை - 7.7%
குமரி - 10.55%
தஞ்சாவூர் - 7.29%
புதுக்கோட்டை- 11.67% 
உதகை- 8.21% 
திருவாரூர்- 14.44%
நாகை - 10.95% 
அரியலூர்- 14.05% 
விருதுநகர் -11.19% 
திருச்சி - 14.8%
தூத்துக்குடி - 8.15%
கடலூர் -12.95%

காலை 11 மணி நிலவரப்படி, 25.81 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்

திருவாரூர் - 36.7% 
புதுக்கோட்டை - 32.55% 
தேனி - 28.61%
நீலகிரி- 20.37% 
தஞ்சாவூர்- 20.2% 
தருமபுரி- 23.79%
மதுரை- 25.06% 
ஈரோடு- 28.36%
கிருஷ்ணகிரி - 18.61%
கோவை -21.98%
திருச்சி- 28.9%
விருதுநகர்- 26.98%

பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 45.76 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்

கடலூர் - 53.31%
திருச்சி - 46.50%
தேனி- 50.9%
நீலகிரி - 35.09%
ஈரோடு - 48.62 சதவீதம்.
தஞ்சாவூர்- 44.10
ஈரோடு -48.62%
திருவாரூர்- 56.89%
மதுரை- 42.21%  
கன்னியாகுமரி - 39.52%
திண்டுக்கல் - 47.97%
நாகப்பட்டினம் - 42.16%
கரூர்- 53.69%
புதுக்கோட்டை- 51.47%
நாமக்கல்-  51.90%
திருப்பூர்- 45.31%
தூத்துக்குடி- 43.99%
சேலம்- 49.40%
கோவை- 40.4%
விருதுநகர்- 50.16%

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்ட வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்:

கரூர் - 70.72%
தஞ்சாவூர் - 59.86% 
திருவாரூர் - 68.54% 
திருச்சி - 65.2% 
நாகை -64.53%  
அரியலூர் - 60.41% 
திருவள்ளூர் - 50.85%  
திருவண்ணாமலை - 52.31% 
கடலூர் - 70.33% 
தருமபுரி - 56.02% 
கிரிஷ்ணகிரி - 65.48% 
திண்டுக்கல் -62.37% 
சிவகங்கை - 54.3% 
விருதுநகர் -63.98% 
புதுக்கோட்டை - 68.52% 
மதுரை -64.65% 
தேனி - 64.08% 
ராமநாதபுரம் - 65.65% 
தூத்துக்குடி - 56.35% 
கன்னியாகுமரி - 52.15% 
கடலூர் - 70.33%
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com