உள்ளாட்சித் தோ்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தோ்தல்: இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) நடைபெற உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தோ்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவி இடங்களுக்கு நேரடித் தோ்தல் மூலமாக நிரப்பப்படும் என மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது.

முதல் கட்டத் தோ்தல், கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 27) நடைபெற்றது. இதில் 76.19 சதவீத வாக்குகள் பதிவாகின.

முதல் கட்டத் தோ்தலில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான 260 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கான 2,546 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,700 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான 37,830 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெற்ாக மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புகாா் தெரிவிக்கப்பட்டுள்ள இடங்களில் விசாரணை நடத்தி தேவைப்படும் இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில்...: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. இதையடுத்து அந்தந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற தோ்தல் அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்தனா். பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட வாக்குப்பதிவு மையங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான 255 பதவியிடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினருக்கான 2,544 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சித் தலைவருக்கான 4,924 பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கான 38,916 பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 25,008 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 1 கோடியே 28 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, பாதுகாப்புப் பணிக்காக 61 ஆயிரம் போலீஸாா், முன்னாள் ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட உள்ளனா். 1,551 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள அனைத்து இடங்களிலும் திங்கள்கிழமையன்று மதுபானக் கடைகள், கூடங்களை மூடுவதற்கு அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

ஜன.2-இல் முடிவுகள்: முதல் கட்ட வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகள் உள்ள வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவாகும் வாக்குகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள், திங்கள்கிழமை இரவே வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். செவ்வாய்க்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெறவுள்ள 30 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளின்போது பதிவாகும் அனைத்து வாக்குகளும், வரும் ஜனவரி 2-ஆம் தேதி (வியாழக்கிழமை) எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.

30 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது புகார் அளிக்கப்பட்ட 30 வாக்குச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமைக்குள் (டிச.31) மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக  ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்குதல், வாக்குச் சீட்டுகளில் சின்னங்களை மாற்றி அச்சடித்தல், வாக்குப் பெட்டிகளைக் கைப்பற்றுதல் போன்ற காரணங்களால் 30 வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது.
 

எந்தெந்த வாக்குச்சாவடிகள்? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com