சென்னையில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் கோலமிடும் போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் கோலமிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
சென்னையில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் கோலமிடும் போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னையில் மகிளா காங்கிரஸ் கட்சியினர் கோலமிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பெண்கள் கோலமிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையைச் சேர்ந்த பெண்கள் சிலர் தங்கள் வீட்டின் முன்பு கோலம் போட்டு அத்துடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்களை எழுதியிருந்தனர். முதல்நாள் நடந்த போராட்டத்தில் பெசன்ட் நகரில் சில பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.


இந்த நிலையில், இன்று சென்னையில் மகிளா காங்கிரஸ் அமைப்பினர் சார்பில் கோலமிடும் போராட்டம் நடைபெறுகிறது. பெண்கள் ரங்கோலி கோலமிட்டு அதில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வாசங்கங்களை பதிவிட்டுள்ளனர். போராட்டத்தை நிறுத்தச் சொல்லி அவர்களை போலீஸார் வற்புத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com