குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தார் தொல்.திருமாவளவன் 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோல வழியிலான எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தார் தொல்.திருமாவளவன் 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோல வழியிலான எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த பெண்கள் சிலர் தங்கள் வீட்டின் முன்பு போடப்படும் கோலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாசகங்களை அண்மையில் எழுதியிருந்தனர்.

இதையடுத்து, அப்பெண்களை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வேளச்சேரியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கோலமிட்டு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். 

அப்போது பேசிய அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோல வழியிலான எதிர்ப்பு போராட்டத்தை தொடர வேண்டும். கருத்து சுதந்திரம் மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தோம். மார்கழி மாதம் முழுதும் வீட்டில் கோலம் இடும் பெண்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோலமிட்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com