Enable Javscript for better performance
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுப்பு: ராமதாஸ் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

    By DIN  |   Published on : 01st February 2019 03:30 AM  |   அ+அ அ-   |    |  

    ramadoss

    தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்திருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முற்றிலுமாக செலவாகி விட்ட நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்று மத்திய அரசு கைவிரித்து விட்டது. மத்திய அரசின் இந்த மனிதநேயமற்ற நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக, நடப்பு ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.55 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. அத்துடன் வேறு வழிகளில் கிடைத்த நிதியையும் சேர்த்து இத்திட்டத்துக்கு ரூ.59,032 கோடி கிடைத்தது. 
    இதில், 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரூ.58,701 கோடி செலவழிக்கப்பட்டு விட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டின்  தொடக்கத்தில் ரூ.331 கோடி மட்டுமே இருப்பு இருந்தது. அதைத் கொண்டு அடுத்த 3 மாதங்களுக்கு வேலை வழங்க முடியாத நிலையில், மத்திய அரசு கடந்த வாரம் ரூ.6,084 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.
     ஆனால், ஆந்திரம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே செய்யப்பட்ட வேலைகளுக்காக ரூ.4,101 கோடி  ஊதிய நிலுவை இருந்தது. மத்திய அரசு ஒதுக்கிய கூடுதல் நிதியிலிருந்து ஊதிய பாக்கி வழங்கப்பட்டது போக ரூ.2,000 கோடிக்கும் குறைவான தொகை தான் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் உள்ளது. 
    இந்த நிலையில்,  அடுத்த இரு மாதங்களுக்கு வழங்கப்படும் வேலைகளுக்கான ஊதியம், இதுவரை வழங்கப்பட்ட வேலைகளுக்கான ஊதிய பாக்கி ஆகியவற்றை மாநில அரசுகளே வழங்க வேண்டும் என்றும், அடுத்த ஆண்டுக்கான நிதி கிடைத்த பிறகு மாநில அரசுகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும்  மத்திய ஊரக வளர்ச்சித்துறை அறிவித்திருக்கிறது. இது ஏற்புடையது அல்ல. எனவே, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் கோடி உள்பட மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp