Enable Javscript for better performance
சென்னை மாவட்டத்தில் 38,18,999 வாக்காளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மாவட்டத்தில் 38,18,999 வாக்காளர்கள்

    By DIN  |   Published on : 01st February 2019 04:39 AM  |   அ+அ அ-   |    |  

    voter

    இறுதி வாக்காளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன்.

    சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், ஆண் வாக்காளர்கள் 18,83,989 பேர், பெண் வாக்காளர்கள் 19,34,078 பேர், திருநங்கைகள் 932 பேர் என மொத்தம் 38,18,999 பேர் இடம் பெற்றுள்ளனர்.
    சென்னை மாவட்டத்தில் 1.1.2019-ஐத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,  நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரின் ஆய்வுக்குப் பின், இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்தப் பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான தா.கார்த்திகேயன் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை வெளியிட்டு செய்தியாளர்களிடம் கூறியது: கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னை மாவட்டத்தின் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 18,71,638 பேர்,  பெண் வாக்காளர்கள் 19,19,582 பேர், திருநங்கைகள் 906 பேர் என மொத்தம் 37,92,126 பேர் இடம் பெற்றிருந்தனர்.
    இதைத் தொடர்ந்து, நடைபெற்ற 2019-ஆம் ஆண்டு சுருக்கமுறைத் திருத்தத்தில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக 1,16,385 பேரிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதில், 1,11,104 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தகுதியற்ற 5,281 மனுக்கள் நிராகரிப்பப்பட்டன. ஏற்கப்பட்ட மனுக்களில் 84,231 தகுதியற்றவை என கண்டறியப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டன. தகுதியுடைய 26,873 பேர் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 18,83,989 பேர், பெண் வாக்காளர்கள் 19,34,078 பேர்,  திருநங்கைகள் 932 என மொத்தம் 38,18,999 பேர் இடம் பெற்றுள்ளனர்.  ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 50,089 பேர் அதிகம்.இது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களை விட 0.71 சதவீதம் அதிகமாகும். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 43,829 பேர் புதிய வாக்காளர்கள்.
    குறைந்த வாக்காளர்கள் தொகுதி: 1,66,515 வாக்காளர்களைக் கொண்ட துறைமுகம் சட்டப் பேரவைத் தொகுதி குறைந்த வாக்காளர்கள் கொண்டது. 2,96,952 வாக்காளர்களைக் கொண்ட வேளச்சேரி தொகுதி அதிக வாக்காளர்கள் கொண்டது. தொகுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.சட்டப் பேரவைத் 


    தொகுதிவாரியாக வாக்காளர்கள்

    தொகுதி    ஆண்கள்    பெண்கள்    திருநங்கைகள்    மொத்தம்
    1. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்    1,18,640    1,26,717    109     2,45,466
    2.  பெரம்பூர்    1,44,103     1,47,415     53    2,91,571
    3. கொளத்துர்    1,29,677    1,34,427    63    2,64,167
    4. வில்லிவாக்கம்    1,20,826    1,24,415    57    2,45,298
    5. திரு.வி.க.நகர் (தனி)    1,01,074     1,06,725    46    2,07,845
    6.  எழும்பூர் (தனி)        88,727         90,017    36    1,78,780
    7.  ராயபுரம்        86,335          89,453     45    1,75,833
    8. துறைமுகம்         87,039         79,427    49    1,66,515
    9. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி    1,09,896    1,13,737    28    2,23,661
    10. ஆயிரம் விளக்கு    1,13,608    1,18,159    84    2,31,851
    11.அண்ணா நகர்    1,33,262    1,37,170    66    2,70,498
    12. விருகம்பாக்கம்    1,35,151    1,34,770    74    2,69,995
    13. சைதாப்பேட்டை    1,31,184    1,34,898    68    2,66,150
    14.தியாகராய நகர்    1,13,043    1,15,680     39    2,28,762
    15. மயிலாப்பூர்    1,24,160    1,31,460    35    2,55,655
    16.வேளச்சேரி    1,47,264    1,49,608    80    2,96,952
     மொத்தம்     18,83,989    19,34,078     932    38,18,999
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp