இதன்மூலம் நமக்குத் தெரிவது என்னவென்றால் தெற்கு சென்னைதான் எப்பவும் டாப்!

சென்னைக்குக் குடியேற வரும் மக்களுக்கு எந்த பகுதி அதிகம் பிடிக்கிறது என்பதை வாக்காளர் இறுதிப் பட்டியல் மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.
இறுதி வாக்காளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட சென்னை மாநகராட்சி  ஆணையர் தா.கார்த்திகேயன்.
இறுதி வாக்காளர் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன்.


சென்னைக்குக் குடியேற வரும் மக்களுக்கு எந்த பகுதி அதிகம் பிடிக்கிறது என்பதை வாக்காளர் இறுதிப் பட்டியல் மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.

அதாவது, கடந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு, 2019ம் ஆண்டு தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்  நேற்று வெளியிடப்பட்டது. இதில், சென்னையின் தெற்கு தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மைலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் இணைந்துள்ளனர். அவ்வளவு ஏன் தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோளிங்கநல்லூர் விளங்குகிறது.

சென்னை தெற்கு தொகுதியில் 2014ல் 17,14,987 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 19,95,709 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதிகளான திருவொற்றியூர், ஆர்.கே. நகர், பெரம்பூர், கொளத்தூர், திருவிக நகர், ராயபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகரித்திருந்தாலும் அது 2014ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 91,188 மட்டுமே அதிகம்.

இதற்கு நேர்மாறாக எழும்பூர், வில்லிவாக்கம், துறைமுகம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளைக் கொண்ட மத்திய சென்னையில் வாக்காளர்களின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது. இங்கு 12,80,251 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10,95,603 ஆகக் குறைந்துள்ளது.

இப்பகுதிகளில் இருந்த குடிசைகள் அகற்றப்பட்டு குடிசை மாற்று வாரியங்கள் வேறிடங்களில் அமைக்கப்பட்டதால் இந்த அளவுக்கு வாக்காளர்களின் எண்ணிக்கை சரிந்திருக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே, சென்னையில் இருப்போரும் சரி, தமிழகத்தின் வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்குக் குடியேற விரும்புவோரும் சரி தெற்கு சென்னையை அதிகம் விரும்புவது இந்த வாக்காளர் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com