வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம்: இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை

வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம் என்று இடைக்கால  பட்ஜெட் குறித்து தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம்: இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழிசை

சென்னை: வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம் என்று இடைக்கால  பட்ஜெட் குறித்து தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.   

இந்நிலையில் வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம் என்று இடைக்கால  பட்ஜெட் குறித்து தமிழிசை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

முதலில் நாட்டு மக்களின் வருமானத்தை உயர்த்திய பிறகு, இதுவரை வளர்ச்சிக்காக தியாகம் செய்த அவர்களுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.      

பொருளாதார வளர்ச்சிப் பட்டியலில் இந்தியாவை 11-ஆவது இடத்தில இருந்து 4-ஆவது இடத்திற்கு பாஜக முன்னேற்றியுள்ளது.

வளர்ச்சிப் பாதையில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியாவை அழைத்து வந்துள்ளோம்

இந்த பட்ஜெட்டின் மூலம் ஏழை எளிய மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com